உள்ளடக்கத்துக்குச் செல்

கௌரி கிருபானந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌரி கிருபானந்தன் (ஆங்கில மொழி: Gowri Kirubanandan) தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்கிற்கும் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்து வருபவர்.[1]

வாழ்க்கைக்குறிப்பு

[தொகு]

இவர் செப்டம்பர் 2, 1956ல் திண்டுக்கல்லில், கிருஷ்ணமூர்த்தி ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆந்திராவில் பணியாற்றியதால் இவரது பள்ளி கல்லூரிப் படிப்பு ஆந்திராவில் நிகழ்ந்தது. வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கடந்த 18 ஆண்டுகளாகத் தனக்குப் பிடித்த நாவல்களை, சிறுகதைகளைத் தமிழிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்து வருகிறார். எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறுகதை, நாவல்களை அனுமதி பெற்று மொழிபெயர்த்தார். அவரது புகழ்பெற்ற ‘அந்தர்முகம்’ நாவலை இவர் மொழிபெயர்க்க, பிரபல அல்லயன்ஸ் பதிப்பகம் அதனை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. ஆந்திராவின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் போராளியான கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் வரலாற்றை ‘ஆளற்ற பாலம்’ என்ற தலைப்பில் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

படைப்புகள்

[தொகு]

எண்டமூரி வீரேந்திரநாத்தின் புகழ்பெற்ற படைப்புகள்

[தொகு]

1.தளபதி 2.பிரளயம் 3.லேடீஸ் ஹாஸ்டல் 4.ரிஷி 5.தூக்குத் தண்டனை 6.பணம் மைனஸ் பணம் 7.துளசி தளம் 8.மீண்டும் துளசி

போன்றவற்றைத் தமிழ் வாசகர்கள் பரவலாக அறிய இவர் காரணமானார்.

யத்தனபூடி சுலோசனா ராணியின் நூல்கள்

[தொகு]

தெலுங்கு இலக்கிய உலகின் மிக முக்கிய எழுத்தாளரும், ‘நாவல் ராணி’ என்று போற்றப்படுபவருமான யத்தனபூடி சுலோசனா ராணியின் நூல்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். அவை 1.சங்கமம் 2.மௌன ராகம் 3.நிவேதிதா 4.சம்யுக்தா 5.தொடுவானம்

ஓல்காவின் படைப்புகள்

[தொகு]

1.மானவி 2.சுஜாதா 3.மீட்சி

தமிழிலிருந்து தெலுங்கிற்கு

[தொகு]

அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, வாசந்தி, சிவசங்கரி, அனுராதா ரமணன், உஷா சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி எனப் பலரது படைப்புகளை வழங்கியிருக்கிறார். மேலும் இவர் 60க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

விருதுகள்

[தொகு]
  • 2015ம் ஆண்ட ‘விமுக்தா’ என்ற பெயரில் திருமதி ஓல்கா எழுதிய தெலுங்கு நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘மீட்சி’ என்ற அதன் மொழிபெயர்ப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.[2][3]
  • கௌரி கிருபானந்தனின் படைப்புகளுக்காகத் திருப்பூர் லயன்ஸ் கிளப் விருது, க்ரோனோக்ராப் குழும விருது உட்படப் பல விருதுகள், பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_கிருபானந்தன்&oldid=3366815" இலிருந்து மீள்விக்கப்பட்டது